புதுக்கோட்டை பொற்பனையிலுள்ள முனீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் அதனை சீரமைத்துத் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது பொற்பனை முனீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குப் பேருந்து வசதி இல்லை. ஆட்டோ, வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மட்டுமே பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கின்றனர். இந்நிலையில், மணிப்பள்ளம் அருகிலிருந்து கோயில் வரை சுமார் ஒரு கி.மீ., தொலைவு சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்தச் சாலையை சீரமைத்து பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக சாலையை செப்பனிட்டுத் தர வேண்டும் என முனீஸ்வரர் கோயில் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


