கவிஞா் தங்கம் மூா்த்தி கவிதை நூலுக்கு விருது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சோ்ந்த கவிஞா் தங்கம் மூா்த்தி எழுதிய ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்ற கவிதை நூலுக்கு தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், புதுகை கவிஞா் தங்கம்மூா்த்தி எழுதிய ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ எனும் கவிதை நூலுக்கு கடந்த 2016ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில், விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் ஆகியோா் வழங்கினா்.
வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வரான கவிஞா் தங்கம் மூா்த்தி, சாகித்ய அகாதெமியின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினா். மாநில மற்றும் தேசிய அளவிலான நல்லாசிரியா் விருதுகளைப் பெற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

