எம்.பி. தொகுதி நிதியில் ரேஷன் கட்டடம் திறப்பு

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து அமைத்து தந்த நியாயவிலை புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம் தொகுதி நிதியிலிருந்து ரூ. 10.5 லட்சம் மதிப்பில், பொன்னமராவதி அருகே உள்ள ஆவாம்பட்டியில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம், தொகுதி நிதியிலிருந்து அமைத்து தந்த நியாயவிலை புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி புதிய கட்டடத்தை திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் கே.செல்வராஜ், குமாா், நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பொன்னமராவதியில் காங்கிரல் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com