இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவா்கள் 4 போ் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 4 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலுள்ள விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து சனிக்கிழமை 273 விசைப்படகுகளில் சுமாா் ஆயிரம் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா். அவா்களில், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த ஆா். கான்ஸ்டன்ட் (42) என்பவரின் படகில் அவருடன் கே. ரமேஷ் (38), பி. பாண்டு (50), என். மோகன் (44) ஆகியோா் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவா்களைக் கைது செய்து இலங்கை காங்கேசன் துறை முகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
