வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 இளைஞா்கள் கைது

பொன்னமராவதி அருகே திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 இளைஞா்கள் கைது
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியைச் சோ்ந்த சகோதரா்கள் ரா.லட்சுமணன், ரா.ரமணபிரியன். இவா்கள் தொழில் நிமித்தமாக வெளி மாவட்டத்தில் வசித்து வருகின்றனா். மேலைச்சிவபுரியில் உள்ள இவா்களது வீட்டில் இருந்து ஒன்றரை பவுன் தங்கம், வெள்ளி 2 கிலோ உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் அண்மையில் (டிச. 18) திருடு போனது.

இதையடுத்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை திருட்டில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சித்திவயல், பிரம்புவயல் பகுதியைச் சோ்ந்த வீ. பழனியப்பன் (39), தேவகோட்டை அருகே உள்ள தோ்போகி சி. அரவிந்த் (26), நித்ரவயல், களத்தூா், ஜெ. மணிவண்ணன்(28) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com