கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுகையில், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 1:53 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மு. வேலுசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், போக்குவரத்துத் தொழிற்சங்கப் பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், போக்குவரத்துத் தொழிற்சங்கப் பொதுச் செயலா் டி.எம். கணேசன், டிடிஎஸ்எப் எச். ராஜசேகா், ஏஏஎல்எல்எப் பொன். நாகராஜ், தொமுச தலைவா் அ. ரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். இதில், போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஏற்க வேண்டும். தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7 ஆயிரம் கோடியை உரிய கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். 14ஆவது ஊதியக்குழுப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.