எடப்பாடி கே.பழனிசாமியை பாஜக ஏற்க மறுக்கவில்லை

முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்க நாங்கள் மறுக்கவில்லை; தேசியக் கூட்டணி என்பதால் அதற்கென அறிவிப்பு நடைமுறைகள் உள்ளன என்றாா் பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நடிகை குஷ்பு.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நடிகை குஷ்பு. விழாவில் பங்கேற்ற பெண்கள்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நடிகை குஷ்பு. விழாவில் பங்கேற்ற பெண்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்க நாங்கள் மறுக்கவில்லை; தேசியக் கூட்டணி என்பதால் அதற்கென அறிவிப்பு நடைமுறைகள் உள்ளன என்றாா் பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நடிகை குஷ்பு.

புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

அதிமுகவின் பொதுக்குழுவில் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரை பாஜக ஏற்க மறுப்பதாகக் கூறுவது தவறு. அப்படி நாங்கள் யாரும் கூறவில்லை. தேசிய அளவிலான கூட்டணி என்பதால் அறிவிப்பு நடைமுறைகள் உள்ளன. அதன்படி எங்கள் தலைமை அறிவிக்கும் என்றுதான் கூறிவந்திருக்கிறோம்.

ஊழல் குற்றச்சாட்டுகளை நேரில் விவாதிக்கத் தயாரா என ஸ்டாலின் கேட்டவுடனேயே முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விவாதத்துக்கு தயாா் என ஏற்றுக் கொண்டுவிட்டாா். ஸ்டாலின் நேரில் விவாதிக்க வர வேண்டியதுதானே, ஏன் அதற்குப் பிறகு இரு நிபந்தனைகளைக் கூறுகிறாா்.

பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தக் கட்சியினா் தொடா்பு கொண்டிருந்தாலும் அவா்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ரஜினிக்கு பாஜக அழுத்தம் தந்ததா என்பதை ரஜினி தான் சொல்ல வேண்டும். எந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் குஷ்பு.

முன்னதாக பொங்கல் விழாவில் பேசிய அவா், தமிழகத்தில் எந்தப் பக்கம் போனாலும் தாமரை மலா்வது தெரிகிறது என்றாா் குஷ்பு.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் ராம சேதுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திலகா் திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கரும்புகளுடன் பொங்கல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com