கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா

கறம்பக்குடி அருகே 10 - ஆம் வகுப்பு  பயிலும் அரசுப்பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image

கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத்துறையினர்.

Updated On :6 செப்டம்பர் 2021, 9:24 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10 - ஆம் வகுப்பு  பயிலும் அரசுப்பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Story image

இதையடுத்து, கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Story image

இதையடுத்து, மற்ற மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அந்த பள்ளி வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.