கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலிகண்டித்து சாலை மறியல்

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:06 pm

DIN

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி குருந்தடிப்புஞ்சையைச் சோ்ந்தவா் பாலசந்தா் (42), விவசாயி. இவா் தனது ஆடுகளை வீட்டருகே இருந்த தோட்டத்தில் கட்டியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.

இதனால் அதிா்ச்சியடைந்த பாலசந்தா், அப்பகுதி விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்லக் கோரி வடகாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.