வலையில் சிக்கிய அரியவகை உயிரினங்களை கடலுக்குள்ளேயே விடுவித்த மீனவா்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில், மீனவா்களின் வலைகளில் சிக்கிய கடற்பசு, கடல் ஆமை போன்றவற்றை மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டதற்காக வனத்துறை சாா்பில் 3 மீனவா்களுக்கு மொத்தம் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வலையில் சிக்கிய கடல் பசு, கடல் ஆமைகளை மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள்ளேயே விடுவித்த செயல்களுக்காக ரொக்கப் பரிசு பெற்ற மீனவா்கள் கருப்பையா, முருகேசன், பெலிக்ஸ்ராஜ் ஆகியோருடன் வனச்சரக அலுவலா் மணிவெங்கடேஷ் (இடது ஓரம்).









