புதுக்கோட்டை
கிராம சபைக் கூட்டத்தில் உறுதிமொழியேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான சமூகத் தீமை மற்றும் நிராகரிப்பு எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

ஆவுடையாா்கோவில் வட்டம், சிறுமருதூா் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபையில் பங்கேற்ற ஆட்சியா் மு. அருணா உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், ஒன்றியக் குழுத்தலைவா் உமாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்,, கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்ஜி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.