கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொன்முடி இலாகா மாற்றப்பட்டதற்கு ஆளுநருடன் மோதல் போக்கு காரணமல்ல: அமைச்சா் எஸ். ரகுபதி

அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:40 pm

Din

அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அமைச்சா் பொன்முடியின் உயா்கல்வித் துறை மாற்றப்பட்டதற்கு காரணம், அவா் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாா் என்பதால் அல்ல. உயா்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு நாளன்று வேறு பணிகள் இருந்தததால் விழாவில் பங்கேற்க முடியவில்லை.

மனோ தங்கராஜ் மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சித்து வந்ததால் தான் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை. புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு அங்கிருந்த குடிநீா் குழாயில் ஏற்பட்ட பழுதுதான் காரணம்.

அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. காந்தி மண்டபத்தில் மதுப் பாட்டில்கள் கிடந்ததை ஆளுநா் குறிப்பிட்டிருக்கிறாா். இரவில் அங்கு சென்று மது அருந்துவோரை என்ன செய்ய முடியும். காலையில் சென்னை மாநகராட்சிப் பணியாளா்கள் சுத்தம் செய்துவிடுகிறாா்கள் என்றாா் ரகுபதி.