

புதுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால், நகரிலுள்ள கோயில், சாலைகள், பூ மார்க்கெட் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
புதுக்கோட்டை நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதன்படி, சனிக்கிழமை மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை நள்ளிரவில் நகரப் பகுதியில் பெருமழை வெளுத்து வாங்கியது.
இதனால் நகரின் மையப்பகுதியிலுள்ள பல்லவன் குளம் நிரம்பி வழிந்து அருகேயுள்ள சாந்தநாதர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அருகேயுள்ள பூ மார்க்கெட் பகுதியிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல, கீழ 3, கீழ 4 வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்று(அக். 6) காலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவு விவரம் (மி.மீ.யில்):
திருமயம்- 95 மி.மீ.,
புதுக்கோட்டை நகரம்- 84 மி.மீ.,
ஆலங்குடி- 88 மி.மீ.,
பெருங்களூர்- 68 மி.மீ.,
கந்தர்வகோட்டை- 63 மி.மீ.,
ஆவுடையார்கோவில்- 67 மி.மீ.

இதையும் படிக்க: மெரீனா கடற்கரை செல்வோர் கவனத்திற்கு.. போக்குவரத்து மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!

புதுக்கோட்டையில் அம்பேத்கா் சிலை அவமதிப்பு எனப் புகாா்

அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிப்பு

பழைய வீட்டை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

