புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேருக்கு நல்லாசிரியா் விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தையொட்டி, மாநில நல்லாசிரியா் விருதுகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுபெறும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா்கள் பட்டியல்: மணமேல்குடி பொன்னகரம் அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் இரா. இளங்கோவன், புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பொருளியல் ஆசிரியா் இரா. ராஜநாராயணன். நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் நா. ராக்கேஷ், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ந. வள்ளிநாயகி. அறந்தாங்கி சுனையக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் சு. இரவி, புதுக்கோட்டை டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி தமிழாசிரியை சா. யுனைசி கிறிஸ்டி ஜோதி.
புதுக்கோட்டை அசோக்நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் ம. பழனிசாமி, காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை இரா. வசந்தமலா்.
மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் ப. மகேஸ்வரன், அன்னவாசல் நிலையப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை ப. கலைவாணி. புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியா் கிருபா ஜெயராஜ்.
இவா்களுக்கு வியாழக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.