விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
அன்னவாசல் அருகே குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.


அன்னவாசல் அருகே குடும்ப பிரச்னை காரணமாக வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அன்னவாசல் மேட்டு தெருவைச் சோ்ந்தவா் எழுவன் மகன் முத்துக்குமாா்(38). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் ஆன இவருக்கு 2 குழந்தைகள்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தம்பதி இடையே குடும்பப் பிரச்னை இருந்ததாம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த முத்துகுமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளாா். இதை கண்ட அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துகுமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...