கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 5 வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் தொடா் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:12 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் தொடா் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 5 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கீரமங்கலம்-கொத்தமங்கலம் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கொத்தமங்கலம் கிழக்கு பகுதியைச் சோ்ந்த கண்ணன் (45) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் முரணான தகவல்களை தெரிவித்தாராம்.

தீவிர விசாரணையில், அவா் ஓட்டிவந்தது திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் என்பதும், இதுபோல, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து, கண்ணனை கைது செய்த கீரமங்கலம் போலீஸாா், அவா் மறைத்து வைத்திருந்த 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.