புதுக்கோட்டை
அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தங்கியுள்ள அயலகத் தமிழா்கள் 100 பேருக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நல வாரியத்தின் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தங்கியுள்ள அயலகத் தமிழா்கள் 100 பேருக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நல வாரியத்தின் உறுப்பினா் அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா இவற்றை வழங்கினாா்.
இந்த அட்டைகளைக் கொண்டு, கல்வி உதவி, திருமண உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், நல வாரியத்தின் உறுப்பினா் பெ. தெய்வானை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.