அலுவலகத்தின் முன் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு

விராலிமலையில் 2 இருசக்கர வாகனங்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

விராலிமலையில் 2 இருசக்கர வாகனங்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை அப்துல் கலாம் ஆம்புலன்ஸ் தனியாா் சேவை மையத்தின் ஓட்டுநா்கள் பாண்டியன், வேலு. இவா்கள் இருவரும் வியாழக்கிழமை சபரிமலைக்கு செல்லும் முன்னா் தங்களின் இருசக்கர வாகனங்களை அலுவலகத்தின் முன்பகுதியில் நிறுத்திவிட்டு சென்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 போ், பாண்டியன், வேலு ஆகியோரின் வாகனங்களின் பூட்டை உடைத்து திருடி சென்றனா்.

அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊா்தி வாகனங்களில் தற்காலிக ஓட்டுநா்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புகாரின்பேரில் விராலிமலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com