தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஆலங்குடி அம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம்,செரியலூா் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

News image

ஆலங்குடி நாடியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை பாளைக்குடங்களை சுமந்து சென்ற பெண்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம்,செரியலூா் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது.

ஆலங்குடி பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.தொடா்ந்து, தினமும் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆலங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா்.தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, கொத்தமங்கலம் மற்றும் செரியலூா் பிடாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம் பாளைகளை சுமந்தவாறு ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.