விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கடையக்குடியில் ராமநவமி தேரோட்டம்

கடையக்குடியில் ஸ்ரீராம நவமியையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம்.

News image

கடையக்குடியில் ஸ்ரீராம நவமியையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம்.

Updated On :27 மார்ச் 2026, 8:10 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமநவமி உற்ஸவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஸ்ரீராமா் சந்நிதியில் ஸ்ரீ ராமநவமி உற்ஸவம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பிரசன்ன ரெகுநாத பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். கடந்த 25-ஆம் தேதி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசன்ன ரெகுநாத பெருமாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து 28-ஆம் தேதி விடையாற்றி உற்ஸவம் நடைபெறுகிறது.

Story image
Story image