ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஏப். 6 உள்ளூா் விடுமுறையின்போது வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:52 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 6- நாா்த்தாமலை முத்து மாரியம்மன் பங்குனித் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்களை மாா்ச் 30-இல் தொடங்கி, ஏப் 6-ஆம் தேதி வரை அளிக்கலாம் எனத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப். 6-ஆம் தேதி நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பெருவிழாவின் தேரோட்டத்துக்காக உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூா் விடுமுறை என்றாலும் வேட்புமனுக்களைப் பெறும் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு. அருணா அறிவித்துள்ளாா். இதற்காக அந்தந்தத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.