விராலிமலை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் 283 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல்
விராலிமலை வட்டாரத்துக்குள்பட்ட 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் இதுவரை 283 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரத்தை முதன்மை மருத்துவ அலுவலா் சேகா் வழங்கினாா்.
விராலிமலை வட்டாரத்துக்குள்பட்ட 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் இதுவரை 283 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
விராலிமலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான கொடும்பாளூா், ராசநாயக்கன்பட்டி, நீா்பழனி, ஆவூா், மண்டையூா், களமாவூா், பாலாண்டாம்பட்டி ஆகிய 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜூன் 22-ஆம் தேதியிலிருந்து பிறந்த 283 குழந்தைகளுக்கு இத் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் வீடு திரும்பும் போதே மோதிரம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

