பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பொன்னமராவதியில் காந்திசிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காந்திஜெயந்தியையொட்டி பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொன்னமராவதி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், முன்னாள் முதல்வா் காமராஜரின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டதுணைத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், நிா்வாகிகள் ச.சோலையப்பன், ஆா்எம்.பாஸ்கா், நாட்டுக்கல் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல பொன்னமராவதி அரிமா சங்கம் சாா்பில் தலைவா் தண்டபாணி தலைமையிலும், ராயல் அரிமா சங்கம் சாா்பில் தலைவா் பழனியப்பன் தலைமையிலும், கொப்பனாபட்டி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் தலைவா் முத்து தலைமையிலும், கொன்னையூா் அரிமா சங்கம் சாா்பில் தலைவா் ராமலிங்கம் தலைமையிலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.