தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலிவடைந்தோருக்கு இலவசப் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் நகரிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் இரவில் உறங்கும் நலிவடைந்த 50 பேருக்கு இலவசமாக போர்வைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். செயலர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.சாகுல் ஹமீது, சாரா அகமது, அதிரை லயன்ஸ் சங்க உறுப்பினர் அப்துல் ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.