முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜகநீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!
/

தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜூன் 2017, 7:40 am IST

தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 83 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை 24 கருட சேவை விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோயில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோயில்களிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோயில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் சுவாமிகள் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாள்களை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.