மாவட்டத்தில் 28 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
Updated on
1 min read

தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்டத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்து திறக்கப்பட்ட 28 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 131 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூரில் 11 கடைகளும், கும்பகோணத்தில் 7, பட்டுக்கோட்டை நகரில் 2,  பேரூராட்சிப் பகுதியில் 8 கடைகளும் மூடப்பட்டன. 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தற்போது 103 கடைகள் செயல்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com