பட்டுக்கோட்டையில் நகராட்சி ஜெயாலயம் பள்ளியில் ஓய்வூதியர்கள் சங்க வட்டக் கிளைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு உள்ள பிரச்னைகள், சிக்கல்கள் குறித்து அரசுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்ட பின்னரும், ஓய்வூதியர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் அவசர கதியில் அதே நிறுவனத்தில் 1.7.2018 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் கட்டாயம் எனவும், இத்திட்டத்திற்குரிய பங்குத் தொகையை ரூ.150-ல் இருந்து ரூ.350-ஆக உயர்த்தி இருப்பதும் ஏற்புடையதல்ல.
எனவே, குடும்ப நலத் திட்டத்திற்கு எப்படி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டதோ, அதேபோல இந்த திட்டத்தையும் கட்டாயப்படுத்தாமல் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சேர அனுமதிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சிவ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.சாரநாதன் வரவேற்றார். துணைத்தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடி வனப் பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ஜவுளி உற்பத்தியாளா்களின் கூலி குறைப்பால் விசைத்தறியாளா்கள் விரைவில் போராட்டம்

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் யானை நடமாட்டம்

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பெண் வரி வசூலா் கைது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


