பைக்கில் சென்ற இருவர் பேருந்து மோதி சாவு

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள மணக்கரம்பையைச் சேர்ந்தவர்கள் மரியதாஸ் மகன் ஸ்டாலின்ராஜ் (27), கோபால் மகன் இளையராஜா (26). 
இருவரும் புதன்கிழமை இரவு தஞ்சாவூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணக்கரம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 
அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்றபோது  எதிரே திருவையாறிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து மோதி இருவரும் உயிரிழந்தனர். 
நடுக்காவேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.