
தஞ்சாவூரில் செப். 18-ம் தேதி மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் செப். 18 காலை 10 மணி முதல் மதிப்புக்கூட்டிய பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்பதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 150. முன் பதிவுக்குப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 97893-02906 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




