கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா

தஞ்சாவூரில் சுற்றுலாத் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:21 am

DIN

தஞ்சாவூரில் சுற்றுலாத் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் இருந்து இரு பேருந்துகளில் சென்ற மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்த  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:
இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும், சுற்றுலா பயணிகள் வருவதிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி,  பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சுற்றுலா தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கல்வி மாவட்டத்துக்கு 50 மாணவ, மாணவிகள் வீதம் அரசுப் பள்ளியில் நன்கு பயிலும் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக பெரியகோயில், அரண்மனை, கல்லணை, திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஆகிய இடங்கள் சுற்றி காண்பிக்கப்படுகிறது என்றார் ஆட்சியர். முன்னதாக, சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்பட்ட சுற்றுலா குறித்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.