இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகாமக குளக்கரையில் 3 கோயில்களின் தேரோட்டம்

மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி, கெளதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று

News image
Updated On :1 மார்ச் 2018, 3:20 am

DIN

மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி, கெளதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் தேரோட்டம் கும்பகோணம் மகாமக குளக்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற சிவாலயங்களிலும், பெருமாள் கோயில்களிலும் வெகு விமரிசையாக மாசி மகத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்படி, கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய சிவன் கோயில்களான ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசிமக பெருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேபோல, கடந்த 21 ஆம் தேதி சக்கரபாணி சுவாமி கோயில்,  ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாள் உற்ஸவமாக விழா நடைபெற்று வருகிறது. மற்ற சிவன் கோயில்களான கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர்,  நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 7 சிவன்கோயில்களில் ஏக தின உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காசிவிசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், கவுதமேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று சிவன் கோயில்களின் தேரோட்டம் புதன்கிழமை மகாமக குளக்கரையில் நடைபெற்றது. இதேபோல, வியாழசோமேஸ்வரர் கோயில் தேரோட்டம் அந்தக் கோயிலை சுற்றி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.