
கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து கல்லூரிக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் அறிவித்திருந்தனர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், திடீரென புதன்கிழமையன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. இதுகுறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்காததால், அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு வந்து திரும்பிச் சென்றனர். தொடர்ந்து, கல்லூரி தகவல் பலகையில் விடுமுறை குறித்த தகவலை ஒட்டியதால், போராட்டம் நடத்துவதற்காக வந்த மாணவர்களும் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






