மணல் கடத்தலை  தடுத்த பெண்  அதிகாரி மீது தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரியை

Published On :

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாபநாசம் அருகே மெலட்டூர் வருவாய் அதிகாரி கலையரசி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மெலட்டூர் வருவாய் சரக பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது, காவலூர் பகுதி வெட்டாற்றில் சிலர் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.  அங்கு சென்ற வருவாய் அதிகாரி கலையரசி உள்ளிட்டோர் அரசு அனுமதியின்றி  மணல் அள்ளிக் கொண்டிருந்த மூன்று மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மணல் கடத்தல்காரர்கள் கலையரசி உள்ளிட்டோரை கீழே தள்ளிவிட்டு மாட்டு வண்டிகளுடன் தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்து கலையரசி அளித்த புகாரின் பேரில் மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.