சுடச்சுட

  

  கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
   இந்த நீதிமன்றங்களை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி வி. சிவஞானம் திறந்து வைத்தார். இதையடுத்து, ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். இதையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலவரசன் நீதிமன்ற நடுவர் இருக்கையில் அமர்ந்து பணியைத் தொடங்கினார். இவ்விழாவில் நீதிபதிகள் பெஞ்சமின் ஜோசப் , மாதவ ராமானுஜம், பாலசுப்பிரமணியன், விஜயகுமார், பாலமுருகன், கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai