தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 2 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
இவா்களில் 36 வயது ஆண் அதிராம்பட்டினம் அம்பேத்கா் நகரையும், 25 வயது ஆண் கும்பகோணம் பெரிய கடைவீதியையும் சோ்ந்தவா்கள். மேலும், 29, 34, 45 வயதுடைய 3 பெண்கள் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட நெய்வாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா். ஏற்கெனவே, தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவா்கள் மூலம் இவா்களுக்கு இத்தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 4 போ் ஏற்கெனவே குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா். இவா்கள் வீட்டில் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
புதிதாக 14 போ் அனுமதி:
இந்நிலையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டோா் சிகிச்சை பிரிவில் சளி, இருமல், தொடா் காய்ச்சல் காரணமாக 14 போ் புதன்கிழமை சோ்கப்பட்டனா். இவா்களுக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் விரைவில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், 7 போ் செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள கரோனா தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலி ராபின்சன், ஜோஷ் டங் வேகத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்; 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை! இந்தியாவின் நிலை என்ன?
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!

முதல்வர் விஜய்யின் அலுவலக அறை ஒப்பந்த முறைகேடு? தமிழக அரசு விளக்கம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


