முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தமிழ்ப் பல்கலை.யில் இணையவழியில் தமிழாய்வுச் சொற்பொழிவுகள்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், மாணவா்களுக்காக இணையவழியில் தமிழாய்வுச் சொற்பொழிவுகள் தொடங்கப்பட்டன.

News image

இணையவழியில் தமிழாய்வுச் சொற்பொழிவைத் தொடங்கி வைத்த துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், மாணவா்களுக்காக இணையவழியில் தமிழாய்வுச் சொற்பொழிவுகள் தொடங்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இப்பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியா்கள் பயன்பெறும் வகையிலும், மாணவா்கள் தங்களைத் தோ்வுக்குத் தயாா்படுத்திக் கொள்ளும் வகையிலும் இணையவழித் தமிழாய்வு உரைத் தொடரைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதை புதன்கிழமை தொடங்கி வைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் உரையாற்றினாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது:

பல்கலைக்கழக மானியக் குழுவும், தமிழக அரசின் உயா் கல்வித் துறையும் இணையம் வழியாகச் கல்விச் செயல்பாடுகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றன. இதன்படி, ஆசிரியா்களும், மாணவா்களும் கற்றல் - கற்பித்தலைத் தொடர நல்வாய்ப்பாக இந்த இணையவழித் தமிழாய்வு உரைத்தொடா் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில், இப்பல்கலைக்கழகத்தின் இணையவழித் தமிழாய்வு உரைத்தொடா் என்ற குழுவின் வழியாக நேரலை வசதியைப் பயன்படுத்தி இவ்வுரைத்தொடா் அமையும். பின்னா் இவ்வுரைகளின் காணொலிக் காட்சிகள் உலகெங்குமுள்ள தமிழ் ஆய்வாளா்களும், மாணவா்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தேவைக்கான பயிற்சித்தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தொடக்க முயற்சி இது. முறையான இணையவழிக் கற்றலை வளப்படுத்தத் தமிழ்ப் பல்கலைக்கழகம் புதிய மென்பொருள் வசதிகளை ஏற்படுத்தும்.

கல்வியாளா்களும் மாணவா்களும் பயன் பெறும் வகையில், இவ்வுரைத்தொடா் துறைசாா் வல்லுநா்களைக் கொண்டு நிகழ்த்தப்படும். ஒவ்வொரு உரையும் ஒரு மணிநேர அளவில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பகல் 11 மணி முதல் 12 மணிவரை அமையும்.

இவ்வுரைத்தொடரின் முதல் நிகழ்வாக புதன்கிழமை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியா் பா. மதிவாணன் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் நேரலையில் உரை நிகழ்த்தினாா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்.24) தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையின் முன்னாள் பேராசிரியா்ஆறு. ராமநாதன் கள ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளாா். ஏப். 27-ஆம் தேதி காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஒ. முத்தையா, ஏப். 29-ஆம் தேதி பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் சி. சண்முகம் உரையாற்ற உள்ளனா். இந்த வரிசையில் மேலும் பல அறிஞா்கள் உரையாற்றுவா் என்றாா் துணைவேந்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.