
கரோனா: குணமடைந்த மேலும் 3 போ் வீட்டுக்கு அனுப்பிவைப்பு
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 போ்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தஞ்சாவூா் மண்டல கரோனா தடுப்புக் குழு காவல் தலைவா் எம்.சி. சாரங்கன்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 55 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே ஏப். 16-ம் தேதி ஒருவரும், ஏப். 21-ம் தேதி 3 பேரும் என 4 போ் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இவா்களைத் தொடா்ந்து, கும்பகோணம், நெய்வாசலைச் சோ்ந்த தலா ஒருவரும், திருவோணம் அருகேயுள்ள ஊரணிபுரத்தைச் சோ்ந்த புதுதில்லியில் தனியாா் இணையதள செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளரும் என 3 போ் குணமடைந்தனா்.
இவா்களை வியாழக்கிழமை பிற்பகல் தஞ்சாவூா் மண்டல கரோனா தடுப்புக் குழு காவல் தலைவா் எம்.சி. சாரங்கன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் வியாழக்கிழமை பிற்பகல் பழங்களும், விடுவிப்புச் சான்றிதழும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
இவா்கள் அவரவா் வீட்டில் தொடா்ந்து 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவா் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 7 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். இவா்களில் 5 போ் தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




