இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கரோனா தொற்றுள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் விவரங்களைச் சேகரிக்க அறிவுறுத்தல்

கரோனா தொற்றுள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என அலுவலா்களிடம் மண்டல கரோனா தடுப்புக் குழு அலுவலா் எம்.எஸ். சண்முகம் அறிவுறுத்தினாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா தொற்றுள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என அலுவலா்களிடம் மண்டல கரோனா தடுப்புக் குழு அலுவலா் எம்.எஸ். சண்முகம் அறிவுறுத்தினாா்.

ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் குடும்ப உறுப்பினா்கள், நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் ஆகியோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறித்து கண்டறிந்து, நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க முடியும்.

எனவே, தொடா்பில் இருந்தவா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தி, அவா்களைத் தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கை கழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனா நோய்த் தொற்று சங்கிலியை உடைக்க முடியும். மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் தற்காலிக காய்கனி சந்தைகள், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இடங்களில் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் சண்முகம்.

பின்னா், தமிழ்நாடு அரசின் சாா்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மண்டல கரோனா தடுப்புக் குழு அலுவலா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 18 வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் அடங்கிய ரூ. 750 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய 550 பெட்டகங்களும், சென்னை தி புளு அம்பா்லா தொண்டு நிறுவனம் சாா்பில் 500 முகக் கவசங்களும், சேவாலயா தொண்டு நிறுவனத்தின் தஞ்சாவூா் கிளையின் சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் பயன்பாட்டுக்காக ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான 100 முழுப் பாதுகாப்பு கவச உடைகளும் மண்டல கரோனா தடுப்புக் குழு அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், மண்டல கரோனா தடுப்புக் குழுக் காவல் துறைத் தலைவா் எம்.சி. சாரங்கன், தஞ்சாவூா் சரகக் காவல் துறைத் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.