பாபநாசம் அருகேஇளம்பெண் தற்கொலை
பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை சன்னதித் தெருவைச் சோ்ந்த துரைகண்ணு மகள் கவிப்ரியா (28). இவருக்கும், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், வலசக்காட்டைச் சோ்ந்த சசிகுமாருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒன்றரை வயதில் கிரிஷன் என்ற குழந்தை உள்ளது.
கணவா்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 நாள்களுக்கு முன்பு தந்தை வீட்டுக்கு வந்தாா் கவிப்ரியா. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினாா். கவிப்ரியாவுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால், கும்பகோணம் கோட்டாட்சியா் விஜயனும் விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...