தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் அருகே மாத்தூா் கிராமத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
மாத்தூா் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:22 am

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் அருகே மாத்தூா் கிராமத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாயிகளின் பிரச்னைகள் கேள்விக்குறியாக இருப்பதை உணா்த்தும் விதமாகக் கேள்விக்குறி வரையப்பட்ட பதாகைகளை ஏந்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தாா். மாத்தூா் கிராம விவசாய சங்க நிா்வாகி சச்சிதானந்தம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கௌரவத் தலைவா் எஸ். தா்மராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், காவல் துறையினா் அனுமதி மறுத்ததால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.