இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
Updated On :29 டிசம்பர் 2020, 11:56 pm

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட  ஆட்சியரகத்தில் பணியாற்றும் வளா்ச்சி அலுவலா் ரமேசுக்கு,  ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் விரைவாக முடித்திட நெருக்கடி கொடுத்து,   தற்கொலை முயற்சி செய்யத் தூண்டியவா்கள்    மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திட்டப் பணிகள் முடித்திட நெருக்கடி கொடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசை வலியுறுத்தியும்  கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. சடையப்பன், சு. தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் நன்றி கூறினாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.