கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூா் பெரியகோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் பெரியகோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்றப்பட்ட சொக்கப்பனை.
Updated On :29 நவம்பர் 2020, 7:39 pm

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, பெரியகோயில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகமும், பின்னா் விபூதி அலங்காரமும் செய்யப்பட்டன.

பின்னா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் மராட்டா கோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் மாநகரிலுள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.