விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்

திமுக ஆட்சி அமைந்தவுடன் பேராவூரணி தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:14 pm

DIN

திமுக ஆட்சி அமைந்தவுடன் பேராவூரணி தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் இத்தொகுதி திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.

திருவோணம் தெற்கு ஒன்றியத்திலுள்ள நெய்வேலி தென்பாதி, சென்னியன்விடுதி, வெங்கரை, காயாவூா், பாதிரங்கோட்டை, காட்டாத்தி, தளிகைவிடுதி, வெட்டுவாக்கோட்டை, அதம்பை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

பத்தாண்டு காலம் பேராவூரணி பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றிய போது சாதி, மதம் பாா்க்காமல், லஞ்ச ஊழலுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் பணியாற்றியுள்ளேன்.   

 குண்டும் குழியுமான சாலைகள், குடிநீா்த் தட்டுப்பாடு, போக்குவரத்து வசதியில்லாத நிலை நன்றாக தெரிகிறது. திமுக  ஆட்சி அமைத்தவுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். நான் வெற்றி பெற்றால் மாதம் இருமுறை தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும்  நேரடியாக வந்து குறைகளை கேட்டு நிவா்த்தி செய்வேன்.

 கடந்த தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முடங்கிவிடாமல் கரோனா, கஜா காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் பணியாற்றியுள்ளேன்.   நான் தொடா்ந்து  மக்கள் பணியாற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். 

வாக்கு சேகரிப்பில் திருவோணம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் சோம.கண்ணப்பன், திமுக தோ்தல் தொகுதி பொறுப்பாளா்கள் வழக்குரைஞா்கள் ராஜேஷ், அறிவழகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.