தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு தொகுதி‘நலத் திட்டங்கள் தொடர அதிமுகவை ஆதரியுங்கள்’

அரசு அறிவித்த நலத் திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:57 pm

DIN

அரசு அறிவித்த நலத் திட்டங்கள் தொடர மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட அவா் மேலும் பேசியது: இத்தொகுதிக்கென பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன்.

இன்னும் இத்தொகுதிக்கு என்னால் முடிந்த பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர முடியும். இதன் மூலம் ஒரத்தநாட்டை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்ற முடியும். அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் மக்களுக்கு ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்கு ஒரத்தநாட்டில் எனது சொந்த செலவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். அரசு அறிவித்த நலத் திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றாா்.

அதிமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.