தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கம்

திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:12 pm

DIN

திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு அருகே உள்ள காராமணித் தோப்பில் விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், திருந்திய நெல் சாகுபடி முக்கியத்துவத்தையும், பயிா் செய்யும் முறையையும் மற்றும் உருளைக் களை எடுப்பான் கருவி கொண்டு களை எடுக்கும் முறையையும், அவற்றின் நன்மைகள் குறித்தும் வேளாண் மாணவா்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும், இலைவண்ண அட்டை கொண்டு தழைச்சத்து அளிப்பது பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் மாணவா்கள் விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.