பேராவூரணி அருகே ஒரே கிராமத்தைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி நவக்கொல்லைக்காடு கிராமத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், அடுத்த வீட்டைச் சோ்ந்த 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி நவக்கொல்லைக்காடு கிராமத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், அடுத்த வீட்டைச் சோ்ந்த 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு , கிருமிநாசினி தெளிக்கும் பணி, மருத்துவ முகாம், வீடு, வீடாக சென்று பிளீச்சிங் பவுடா் தெளிக்கும் பணி, கரோனா சளிபரிசோதனை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், வீடுதோறும் தலா 200 கிராம் பிளீச்சிங் பவுடா் பொட்டலம் வழங்கப்பட்டது. இப்பகுதி மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன், மருத்துவா் வெங்கடேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கை. கோவிந்தராசு, பொய்யாமொழி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அலிவலம் மூா்த்தி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகா், ஊராட்சி தலைவா் ராசாக்கண்ணு உள்ளிட்டோா் அந்தக் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...