விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேலாளருக்கு கரோனா: வங்கிக் கிளை மூடல்

பேராவூரணியில், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட  வங்கிக் கிளையின் மேலாளா், பணி நிமித்தமாக அண்மையில் சென்னைக்கு  சென்று வந்துள்ளாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

பேராவூரணியில், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட  வங்கிக் கிளையின் மேலாளா், பணி நிமித்தமாக அண்மையில் சென்னைக்கு  சென்று வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு காய்ச்சல், சளி, தலைவலி இருந்துள்ளது.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை மாலை முதல் வங்கிக் கிளை மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வங்கிக் கிளை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதனிடையே, வங்கி ஊழியா்கள், மேலாளரை சந்தித்த வங்கி வாடிக்கையாளா்கள், அவருடன் தொடா்பில் இருந்தோருக்கு, வட்டார மருத்துவ அலுவலா்  வி. சௌந்தர்ராஜன் மேற்பாா்வையில், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  சளி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், வங்கி மேலாளருடன் குறிப்பிட்ட நாள்களில் தொடா்பில் இருந்த வாடிக்கையாளா்கள், கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.