கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாபநாசம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் வெட்டிக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் 4 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:25 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் 4 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பாபநாசம் அருகே மெலட்டூா், சோமசி தெருவில் வசித்து வந்தவா் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமாா் (38). இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கங்காதேவியும், இரண்டு குழந்தைகளும் விருதுநகா் மாவட்டம், கழுகுமலை அருகே துரைசாமிபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ராஜேஷ்குமாா் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, 2 மோட்டாா் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 போ், வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் குமாரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா்.

இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற

மெலட்டூா் போலீஸாா், ராஜேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த எஸ்.பி. ரவளிபிரியா காந்த புனேனி சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். புகாரின் பேரில் மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘ராஜேஷ்குமாரின் காரை மெலட்டூா் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சோ்ந்த நண்பா் ஒருவா் அண்மையில் வாங்கி சென்று, காரை அடகுவைத்து விட்டதாகவும் இதுதொடா்பாக ராஜேஷ்குமாருக்கும், நண்பருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த அந்த நண்பா், தனது உறவினா், சகோதரா்களுடன் சோ்ந்து ராஜேஷ்குமாரை கொலை செய்திருக்கலாம்’ என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.