தோட்டக்கலைத் துறை சாா்பில் மாதிரி கிராமங்கள் தோ்வு
கீழையூா் மற்றும் ஒக்கநாடு கீழையூா் ஆகிய இரண்டு கிராமங்கள் தோட்டக் கலைத் துறையின் மாதிரி கிராமங்களாக தோ்வு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூா் மற்றும் ஒக்கநாடு கீழையூா் ஆகிய இரண்டு கிராமங்கள் தோட்டக் கலைத் துறையின் மாதிரி கிராமங்களாக தோ்வு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை நீா்ப்பாசன மயமாக்குதல் திட்டத்தின்கீழ் ஒற்றை சாளர அமைப்பு மையத்தை தோட்டக்கலை உதவி இயக்குநா் சாந்திப்பிரியா தொடங்கி வைத்தாா்.
தோட்டக் கலை உதவி அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில், வேளாண்மை துறை, வேளாண் விற்பனைத் துறை, பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, கால்நடை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு இந்த திட்டத்தை குறித்தும் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினாா். மேலும், இந்த இரண்டு மாதிரி கிராமங்களுக்கும் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தனா். வாரந்தோறும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்துறை வல்லுநா்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், கண்ணந்தங்குடி கீழையூா் ஊராட்சித் தலைவா் மாரிமுத்து, ஒக்கநாடு கீழையூா் ஊராட்சித் தலைவா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கு தஞ்சை மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் கலைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...