விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாதா கல்விக் குழுமத்தில் முப்பெரும் விழா

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, மாதா மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:02 pm

DIN

கும்பகோணம் அருகே சாக்கோட்டையிலுள்ள மாதா கல்விக் குழுமத்தில் பாதுகாவலா் புனித சவேரியாா் திருநாள், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, மாதா மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் எப். அந்தோணிசாமி அடிகளாா் வெள்ளிவிழா மலரை வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை தொழிலதிபா் ராயா ஆா். கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டாா்.

மாதா மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகனும், பேச்சுத் திறன் பயிற்சிக் கூடத்தை கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு டி. தேவதாஸ் அடிகளாரும் திறந்து வைத்தனா்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களையும், பரிசுப் பொருள்களையும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் நா. சாமிநாதன் வழங்கினாா்.

விழாவில் மாதா கல்விக் குழுத் தாளாளா் ஐ. மரியசெல்வம், அருட்தந்தையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாதா காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜோதிமணி வரவேற்றாா். நிறைவாக, முதுகலை ஆசிரியை கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.